காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் ஏற்பாட்டில் நடை பவணி-video

காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலய பழைய மாணவர்களின் நடை பவணி இன்று  (புதன்கிழமை)  இடம் பெற்றது.
ஆரோக்கியமான மாணவர் சமூகத்தினை கட்டியெழுப்புவோம் எனும் தொனிப்பொளில்
இந்த நடை பவணி இடம் பெற்றது.

பாடசாலை அதிபர் எம்.ஹக்கீம் உட்பட இப்பாடசாலையில் கல்வி கற்று உயர் பதவிகளில் இருந்து ஓய்வு பெற்றவர்கள்

வைத்தியர்கள் பொறியியலாளர்கள், சட்டத்தாணிகள், பட்டதாரிகள்; போன்ற பல்வேறு துறைகளில் காணப்படுகின்ற பழைய மாணவர்களும் என பலரும் கலந்து கொண்டனர்.
பாடசாலை முன்றில் இருந்து ஆரம்பமான இந்த நடை பவணி காத்தான்குடி பிரதான வீதி மற்றும் ஊர் வீதி வழியாக மீண்டும் பாடசாலை முன்றலை வந்தடைந்தது.
SHARE