தமிழ், முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம்..

(ஊடகவியலாளர் பஹத் ஜுனைட்)

தமிழ் முஸ்லிம் இன மக்கள் ஒற்றுமையாகவும் ,சகோதரத்துடனும் வாழ்ந்து வரும் கிழக்கு மாகாணத்தில் கடந்த சில நாட்களில் இன முறுகல் நிலையை தொற்றுவிக்கும் வகையில் ஒரு சில  இன வாதிகளிகளால் குழப்பங்களை ஏற்படுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகிறது..

பல தசாப்த காலத்தில் இருந்து அண்ணன் தம்பிகளாக ,அயல் வீட்டுக்காரர்களாக,உறவுகளை பேணி வரும் தமிழ் முஸ்லிம் உறவுகளை சகித்துஜ்கொள்ள முடியாத தனிப்பட்ட அரசியல் சுய இலாபத்திற்காக தமிழ், முஸ்லிம் இளைஞர்களை தூண்டிவிட்டு இன வாந்தி எடுத்து அதில் இன்பம் அனுபவிக்கும் இனவாத அறிவிலிகளிடம் இருந்து நாம் கவனமாக இருக்க வேண்டியது மிகக் கட்டாயமாகும்.

கிழக்கில் வாழும் தமிழ் முஸ்லிம்களாகிய நாம் உறவில் மட்டுமல்லாது பொருளாதாரத்திலும், தொழில்களிலும் பின்னிப் பிணைந்து வாழ்கிறோம் காலத்திற்கு காலம் முளைத்து வரும் அரசியல் நஞ்சு செடிகளை நாம் கவணத்தில் கொள்ளத் தேவை இல்லை காரணம் அந்த செடிகளில் உறுதி இல்லை சில காலத்தில் அழுகிய நிலையில் செத்துப் போய்விடும்..

அதே போன்று இனவாத அறிவிலிகள் தங்களது காரியங்களை வெற்றிகரமாக நடாத்துவதற்கு அதிகமான இளைஞர்கள் பாவனையில் இருக்கும் சமூக வலைதளங்களை ஆயுதமாக பயண்படுத்துகின்றனர்.

எனவே இது தொடர்பில் தமிழ்,முஸ்லிம் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் முகநூல் போன்ற சமூக வலைதளங்களில் பதிவுகள் ,பின்னூட்டம் இடும்போதும் அடுத்தவர்களது மனதை புண்படுத்தும் வகையிலோ அடுத்த சமயத்தை அல்லது சகோதர இனத்தை பாதிக்காத வகையில் கவனமாக மேற்கொள்ள வேண்டும்.

இளைஞர்களாகிய எங்களது நல்லிணக்க செயற்பாடுகள் எதிர்கால சந்ததிகளுக்கு முன்னுதாரணமாக எடுத்துக்கொள்ளப்படும் என்பதை உணர்ந்து செயற்படுவது காலத்தின் கட்டாயமாகும்..

SHARE