வாழ்வியல் பயில்வோம் கருத்துரை நிகழ்வு..

(ஊடகப்பிரிவு)
காத்தான்குடி முஹாசபா வலையமைப்பின் அந்நிஸா பெண்கள் பிரிவின் ஏற்பாட்டில் “வாழ்வியல் பயில்வோம் ” எனும் தலைப்பிலான பெண்களுக்கான இலவச கருத்துரை நிகழ்வு அந் நிஸா பிரிவின் தலைவி சகோதரி ஹனீஸா பஹ்த் தலைமையில் 17.03.2019 ஞாயிற்றுக்கிழமை அஸர் தொழுகையை தொடர்ந்து  புதிய காத்தான்குடி நூரானியா ஜும் ஆ பள்ளிவாயலில் சிறப்பாக இடம்பெற்றது.இக் கருத்துரை நிகழ்வுக்கு முஹாசபா வலையமைப்பின் பணிப்பாளர் எம்.பஹ்த் ஜுனைட் அதிதியாக கலந்துகொண்டதுடன்  கொழும்பு தேசிய கண் வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ILM.ரிபாஸ் MBBS,MSC அவர்கள் பிரதம அதியாக  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.

பயன்மிக்க இக் கருத்துரை நிகழ்வில் அதிகமான சகோதரிகள் கலந்துகொண்டு பயன்பெற்றமை குறிப்பிடத்தக்கது.Image may contain: one or more people and shoes

SHARE