ஓட்டமாவடி மத்திய கல்லூரியன் 96 நண்பர்கள் வட்ட  மாதாந்த ஒன்றுகூடல்

-சதீக்-
மட்/மம/ஓட்டமாவடி மத்திய கல்லூரியன் 96 நண்பர்கள் வட்ட  மாதாந்த ஒன்றுகூடல் தலைவர் ஏ.எல்.எம் அனஸ் ஆசிரியர் அவர்களின் இல்லத்தில் நடைபெற்றது
மட் ஓட்டமாவடி மத்திய கல்லூரியின் எதிர்கால வளர்ச்சி மற்றும் எமது பிரதேச கல்வியின் நிலைமைகள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது
இக் கலந்துரையாடலில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்திலுள்ள கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி கோட்டம் கல்வியில் மேலும் முன்னேற்றங்களை செய்வதவற்கான விதந்துரைப்புகள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக க.பொ.த. சாதரண தரம் மற்றும் இப்பிரதேச க.பொ.த.உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் மாணவர்களின் அடைவு மட்டங்களை மேம்படுத்துதல் தொடர்பாகவும் திட்டங்கள் முன்வைக்கப்பட்டது
மேலும் இப்பிரதேசத்தில் புதிதாக ஆரம்ப பிரிவு  பாடசாலைகளை உருவாக்குவதற்கான அவசியத்தினை உறுப்பினர்கள் முன்மொழிந்ததுடன் குறிப்பாக மீள் குடியேற்ற பகுதிகளான மஜ்மா நகர், அறபா நகர,; கொண்டையேன்கேணி, தியாவட்டவான் போன்ற பிரதேசங்களில் ஆரம்ப பாடசாலைகளை உருவாக்குவதற்கான முன்மொழிவுகளும் முன்வைக்கப்பட்டன
எமது பிரதேசத்தின் கல்வி பின்னடைவுகளுக்கு நிலத்தொடர்பற்ற தற்போதைய கல்வி வலயமும் ஒரு காரணம் என சில உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தனர் .எதிர்காலத்தில் இப்பிரதேச அரசியல் தலைமைகள் ,புத்திஜீவிகள்,கல்வியியலாளர்கள் அதிபர்கள் ஆசிரியர்கள் மற்றும் கல்வித்துறையிலுள்ள ஆர்வமுள்ளவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இப்பிரச்சினைகளுக்கு தீர்வாக இப்பிரதேச பாடசாலைகளை வைத்து கோறளைப்பற்று மேற்கு கல்வி கோட்டத்தினை ஒரு உப கல்வி வலயமாக உருவாக்குவது  எனவும்  தீர்மானிக்கப்பட்டதுடன் இவ்விடயங்களை மேற்கொள்வதற்கான 96 நண்பர்கள் வட்ட உறுப்பினர்கள் தங்களால் முடிந்த பங்களிப்புகளையும் அர்ப்பணிப்புகளையும் கல்விக்கான செய்வது எனவும் தீர்மானிக்கபட்டது.மற்றும் ஓட்டமாவடி தேசிய பாடசாலையில் உள்ள குறைபாடுகளையும் நிறைவுகளையும் கேட்டறிவதற்காக ஒரு நாள் தேசிய பாடசாலையின் அதிபர் அவர்களை சந்திப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
SHARE