நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பமானது.

பொது மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்கும் நோக்கில் ‘ரட்ட வெனுவென் எக்கட்ட சிற்றிமு’ எனும் நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தேசிய வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று ஆரம்பமானது. எதிர்வரும் 12ம் திகதி வரை இந்த வேலைத்திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இடம்பெறும்.

போதைப்பொருள் பாவனையை தடுத்தல், சுற்றாடல் பாதுகாப்பு, முப்படையினரின் சமூக சேவை, காணி உறுதிகள் தொடர்பான பிரச்சனைகளை தீர்த்தல், மற்றும் உட்கட்மைப்பு வசதிகள் உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இந்த காலப்பகுதியில் கவனம் செலுத்தப்படும்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் எண்ணக்கருவுக்கு அமைய, உருவாக்கப்படட் இந்த செயற்றிட்டம் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கப்படுகிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் இந்தத் திட்டம் அமுல்ப்படுத்தப்படுகிறது.

SHARE