சாய்ந்தமருது சமுர்த்தி வங்கியில் புத்தாண்டு சேமிப்பு வாரம் ஆரம்பம்.

(றியாத் ஏ. மஜீத்)

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு ‘எங்களைபாதுகாப்போம் சேமிப்பை ஊக்குவிப்போம்’ எனும்தொனிப்பொருளிலான சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தின் இம்மாதம் 16ம் திகதி  தொடக்கம் 29ம் திகதி வரையான புத்தாண்டு சேமிப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்றுகாலை (16) செவ்வாய்க்கிழமை சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியில் இடம்பெற்றது.

சாய்ந்தமருது சமுர்த்தி சமுதாய அடிப்படை வங்கியின் முகாமையாளர் எம்.எஸ்.எம்.மனாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஐ.எம்.றிகாஸ் பிரதம அதிதியாக கலந்து கொண்டு புத்தாண்டு சேமிப்பு வாரத்தை ஆரம்பித்து வைத்தார்.

இந்நிகழ்வில் சாய்ந்தமருது பிரதேச செயலக சமுர்த்தி தலைமையக முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ், சமுர்த்தி சமுதாய அடிப்படைவங்கிச் சங்க முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.எல்.யூ.ஜூனைதா, கருத்திட்ட முகாமையாளர் ஏ.எம்.அப்துல் கபூர், கருத்திட்ட உதவியாளர் எம்.எம்.எம்.முபாறக், உதவி முகாமையாளர் ஏ.எம்.எம்.றியாத் உள்ளிட்ட சமுர்த்தி அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்..Image may contain: 8 people, people smiling, people sitting and people standingImage may contain: 8 people, people standing and people sittingImage may contain: 6 people, people standing

SHARE