இந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி

ஓட்டமாவடி நிருபர் அ.ச.முகம்மது சதீக்
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை கருத்திற்கொண்டு விவசாய நீர்ப்பாசன கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் கௌரவ எம்.எஸ்.எஸ் அமீர் அலி அவர்களினால் இன்று ஓட்டமாவடி பாத்திமா பாலிகா மகா வித்தியாலத்தில் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இந்நாட்டில் தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக மௌன அஞ்சலி அனுஸ்டிக்கப்பட்டது.
இதில் இந்நாட்டில் ஏற்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிர் நீத்த ஆத்மாக்களுக்காக கௌரவ இராஜங்க அமைச்சர் எம் எஸ் எஸ் அமீர் அலி அவர்கள் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்ததுடன், சட்டம், ஓழுங்கை நிலைநாட்ட வரும் இந்நாட்டின் பொலிசார் முப்படையினருக்கும் பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பை வழங்குமாறு வேண்டிக்கொண்டார் . மற்றும் பள்ளிவாயல்கள் பொது இடங்களை பாதுகாப்புகளை பலப்படுத்துமாறும் கூறினார.;மற்றும் பாதுகாப்படை அதிகாரி மேஜர் அமர அவர்கள் பேசுகையில், இந்நாட்டில் முப்பது வருடகால யுத்தம் முடிவடைந்து, பத்துவருடங்களின் பின்னர் இவ்வாறான ஒரு துயரச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. மக்கள் அமைதியை பேணுமாறும் சந்தேகத்திற்கிடமான விடயங்கைள உடனுக்குடன் அறிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
இதில் சமூக நல வலுவூட்டல் இராஜாங்க அமைச்சர் கௌரவ அலிசாகிர் மௌலானா, பள்ளிவாயலின் தர்மகர்த்தாக்கள், மற்றும் பொது நல அமைப்புகள்,கல்குடா ஜம்மியத்துல் உலமா சபை ,கல்வி மான்கள், பிரதேச சபை உறுப்பினர்கள,; தவிசாளர்,பிரதேச செயலாளர்கள், வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்சன பெரமுன மற்றும் பாதுகாப்பு படை அதிகாரி மேஜர் அமர ,கடற்படைத்தளபதி ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.

SHARE