ஆப்பிரிக்காவில் தேவாலயத்துக்குள் துப்பாக்கிச்சூடு; பாதிரியார் உள்பட 6 பேர் பலி.

அந்த கும்பல், பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்தவர்களை குறிவைத்து கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் தொற்றிக்கொண்டது.

மக்கள் அனைவரும் உயிரைக்காப்பாற்றிக் கொள்ள நாலாபுறமும் சிதறி ஓடினர். எனினும் இந்த துப்பாக்கிச்சூட்டில் பாதிரியார் உள்பட 6 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். அதன் பின்னரும் அந்த மர்ம கும்பல் தனது வெறியாட்டத்தை தொடர்ந்தது. தேவாலயத்துக்கும், அதனை சுற்றி உள்ள கட்டிடங்களுக்கும் தீ வைத்துவிட்டு, அந்த கும்பல் தப்பி சென்றது.

இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. கடந்த 5 வாரங்களில் தேவாலயங்களை குறிவைத்து நடத்தப்பட்ட 3-வது தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE