நாட்டில் நிரந்தர அமைதியும் ஐக்கியமும் ஏற்பட வேண்டி விஷேட துஆப் பிராத்தனை..

(எம்.பஹ்த் ஜுனைட்)

ஏப்ரல் 21 நாட்டின் சில இடங்களில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல் மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற அமைதி இன்மையை தொடர்ந்து  நாட்டில் ஏற்பட்டுள்ள அச்சமான  நிலைகளில் இருந்து  நிரந்த அமைதி ஏற்படவும் ஐக்கியமும் சமாதானம் இனங்களுக்கு இடையே நல்லிணக்கமும் வேண்டி விஷேட துஆப் பிரார்த்தனையும் தாக்குதலில் மரணித்தவர்களுக்கான அனுதாப நிகழ்வும் நேற்று

வெள்ளிக்கிழமை (17) காத்தான்குடி ஜாமியுழ்ழாபிரீன் ஜும்ஆப் பள்ளிவாயலில் இடம்பெற்றது.

காத்தான்குடி ஜாமியத்துல் பலாஹ் அரபுக்கல்லூரியின் சிரேஷ்ட விரிவுரையாளரும் மூத்த உலமாக்களில் ஒருவருமான மெளலவி ஏ.ஜி.எம்.அமீன் (பலாஹி) விஷேட துஆப் பிரார்த்தனை நடாத்தியதுடன் காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபையின் தலைவர் மெளலவி ஏ.எம்.ஹாறூன் (றஸாதி) சிறப்புரை நிகழ்த்தினார்.

காத்தான்குடி ஜம் இய்யதுல் உலமா சபையின் ஏற்பாட்டிலும் காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளனத்தினது அனுசரணையிலும் இடம்பெற்ற இவ் விஷேட துஆப் பிரார்த்தனையில் உலமாக்கள், ஊர் பிரமுகர்கள் உட்பட பொதுமக்கள் என பெரும் திரளானோர் கலந்துகொண்டனர்.Image may contain: 2 peopleImage may contain: 1 personImage may contain: 2 people, beardImage may contain: 5 people, people smiling, beard

SHARE