சைபர் தாக்குதல் குறித்து வெளியாகியுள்ள தகவல்.

அண்மையில், நாட்டின் இணையத்தளங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சைபர் தாக்குதல் குறித்து தகவல்களை கணினி அவசர நடவடிக்கை ஒன்றியம் வெளிப்படுத்தியுள்ளது.

இதன்படி, குறித்த சைபர் தாக்குதலானது, வெளிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுக்கப்பட்டதாக அந்த ஒன்றியத்தின் நிறைவேற்று அதிகாரி லால் டயஸ் தெரிவித்துள்ளார்.

அந்த வகையில், கடந்த 18ம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது ஒரு குழுவினராலும், 19ம் திகதி இடம்பெற்ற தாக்குதலானது மற்றுமொரு குழுவினராலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து தொடர்ந்தும் பேசிய அவர், சைபர் தாக்குதலுக்கு உள்ளான இணையத்தளங்களில் 99 வீதமானவை, வழமைக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

சைபர் தாக்குதல் இடம்பெறக்கூடும் என ஏற்கனவே தகவல்கள் கிடைத்திருந்தன். எனினும், இந்த சைபர் தாக்குதல் ஊடாக எவ்விதத் தரவுகளையும் தாக்குதல்தாரர்களுக்கு பெற்றுக்கொள்ள முடியவில்லை” என அவர் மேலும் தெரிவித்ததார்.

இதேவேளை, இலங்கையிலுள்ள வெளிநாட்டுத் தூதரக இணைத்தளம் உள்ளிட்ட 13 இணையத்தளங்கள் மீது அண்மையில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

SHARE