நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ள விண்கல்

சொந்த நிலவு ஒன்று உள்ள சுமார் ஒரு மைல் அகலமான விண்கல் ஒன்று நிமிடத்திற்கு 48000 மைல் வேகத்தில் நாளை பூமியை நெருங்கி கடந்து செல்லவுள்ளதாக தெரியவருகிறது.

இது தொடர்பான செய்தி இன்றைய தினம் அரச பத்திரியையொன்றில் வெளியிடப்பட்டுள்ளது. அந்த செய்தியில் மேலும்,

1999 கே.டபிள்யூ 4 என்ற பெயர் கொண்ட இந்த விண்கல் 20 ஆண்டுகளுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டதோடு நிலவு ஒன்று வலம் வரும் அளவுக்கு அது பெரிதானதாகும்.

இந்த விண்கல் நாளை பூமியை நெருங்குகின்ற போதும் அதனுடன் பெரிய நிலவு ஒன்றையும் கொண்டிருப்பதால் வரும் 27ஆம் திகதி வரை அதனை காணக்கூடியதாக இருக்கும் என்று வானியலாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

1999 கே.டபிள்யூ 4 விண்கல் ஒப்பீட்டளவில் பூமியை நெருங்கி வருவதால் “சாத்தியமான ஆபத்தான சிறுகோள்” என ஸ்மித்சன் ஆஸ்ட் ரோபிசிக்கள் கண்காணிப்பகத்தின் சிறுகோள் மையத்தால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த விண்கல் பூமியில் இருந்து 3.2 மில்லியன் மைல்கள் நெருங்கி வரவுள்ளது. இது பூமிக்கும் நிலவுக்கும் இடையிலான தூரத்தில் சுமார் 13 மடங்காகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

SHARE