நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கான வேலைத்திட்டம் ஆரம்பம்.

நிவாரண விலையில் பொதுமக்களுக்காக உள்ளுர் விமான சேவைகளை மேற்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்தும் வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து நிதி அமைச்சுடன் கலந்துரையாடவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் பேசிய அவர்,

இதற்கிணைவாக மட்டக்களப்பு, திருகோணமலை, சீகிரியா, பலாலி உள்ளிட்ட விமான நிலையங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மேலும் பலாலி விமான நிலையத்தில் பயணிகள் விமானத்தை தரையிறக்குவதற்கான வசதிகளை ஏற்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் அசோக் அபேசிங்க தெரிவித்தார்.

SHARE