புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணியில் 6,976 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர்.

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி ஆகஸ்ட் மாதம் 15 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரையில் இடம்பெறும் என்று பரீட்சை ஆணையாளர் நாயகம் சனத் பூஜுத்த தெரிவித்தார்.

39 பாடசாலைகளில் 436 மதிப்பீட்டு சபையின்கீழ் நடைபெறவுள்ள இந்த மதிப்பீட்டு நடவடிக்கைகளில் 6,976 ஆசிரியர்கள் ஈடுபடவுள்ளனர். இதற்காக தெரிவுசெய்யப்பட்டுள்ள பாடசாலை விபரங்களையும் பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.

SHARE